ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை பாராளுமன்றம் நிராகரிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜெனீவா தீர்மானங்களை முழு அளவில் துரித கதியில் அமுல்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கிடையாது எனவும் யுத்தமொன்றின் போது மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்புக்களுக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1990களில் தெற்கில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜெனீவாவிற்கு சென்று முறையிட்டிருந்தார் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
லசந்த படுகொலை, பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம், மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் கொல்லப்பட்டமை, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டiமை போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகளை அதன் பின்னணியில் யுத்த வீரர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக கைவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
1 comment
ஜெனீவா தீர்மானங்களை முழு அளவில் துரித கதியில் அமுல்படுத்த ஒரு கால அட்டவணையை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். இதை இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை. அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எந்த வித வித்தியாசமும் அவர்களின் மனப்பாங்கில் இல்லை. இவர்களின் நடத்தை கள்ள அரசு, தோற்ற அரசு மற்றும் அடக்கியாளும் அரசு போன்றது