கர்ப்பகாலத்தில் அதிகளவான பெண்கள் உரிய எடையை கொண்டிருப்பதில்லை என உலக அளவில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
25 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் தேவையான அளவை விடவும் குறைந்தளவு எடையை கொண்டிருப்பதுடன், 50 வீதமான கர்ப்பிணிகள் தேவைக்கு அதிகளவு எடையைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் மெல்மர்னில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறைந்தளவு எடையை உடைய கர்ப்பிணித் தாய்மார்களின் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கக்கூடும் என்பதுடன், குறைமாதத்தில் குழந்தைகளை பிரசவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு எடையுடைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேரிடுவதாகவும், குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.