183
கட்டாருடன் அண்டை நாடுகள் தூதரக உறவைத் துண்டித்திருப்பதால் அந்த நாட்டில் வசிக்கும் சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தூதரக உறவைத் துண்டித்துள்ளன.
தங்கள் நாடுகளில் தங்கியுள்ள கட்டார் குடிமக்கள் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் கெடு விதித்துள்ளதுடன் தரை, வான், கடல் வழி போக்குவரத்துகளையும் ரத்து செய்துள்ளன.
Spread the love