நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மலேசியா சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்பகள் வெளியாகியுள்ளன.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக உள்ள பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் இ பங்கேற்பதற்காக நேற்றையதினம் நள்ளிரவு 11.55 மணியளவில் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டுச் சென்ற வைகோ இன்று காலை 6.30 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையம் சென்றடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து மலேசிய அதிகாரிகள் மலேசியா நாட்டுக்கான ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இலங்கையில் வைகோ மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக தெரிவித்த மலேசிய அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக மதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.