பிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த நபரினால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுமார் 2 மணித்தியாலங்களாக அவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்ததாவும் தற்போது அவர்கள் மீகப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கு பணிபுரிந்தவர்கள் பலரை பிடித்து பலரை பயணக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த நபர் பலரை பிடித்து வைத்துள்ளார்
Jun 9, 2017 @ 09:52
பிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் பலரை பிடித்து வைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பைக்கர் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் ஆயுதபாணி நுழைந்து அங்கு பணிபுரிந்தவர்கள் பலரை பிடித்து வைத்திருப்பதாகவும் ; காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதி தடுக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறை சமரச பேச்சுவார்த்தையாளர்கள் அங்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நபரை அந்த அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பாகவே தெரியும் என்றும் இதனை தனியான ஒரு சம்பவமாகவே இப்போதைக்கு கருதுவதாகவும் நோர்தம்பிரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பைக்கருக்கான புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் அருகில் இருந்த மாணவர்களுக்கான விடுதியில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளததாகவும்காவல்துறையினர் தெரிவித்துள்ள அதேவேளை அந்த பகுதியை தவிர்க்குமாறு பயணிகளுக்கு புகையிரத சேவையை நடந்தும் நிறுவனம் கூறியுள்ளது.