சிறுவர்களை தொழிலாளர்களாக வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதனை அமுல்படுத்துவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கு அதிகாரசபை பல்வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதை எவராவது அவதானித்தால் அதனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அவ்வாறு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் தொழில் திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.