178
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடு திரும்புவதாக பிதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைகளின் பின்னர் இன்று மாலை நாடு திரும்புகின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அண்மையில் இயற்கை சீற்றத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கிய மக்களை பிரதமர் நாளைய தினம் சந்திக்க உள்ளார். குறிப்பாக காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரமதர் நாளை சந்திக்க உள்ளார்.
Spread the love