முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் இராணுவத்திற்கு 750 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகாமையில் காணப்பட்ட இராணுவ தலைமையகத்தை அந்த இடத்தை, ஷெங்ரீலா ஹோட்டல் நிர்மானிப்பதற்கு கடந்த அரசாங்கம் வழங்கியிருந்தது. இந்த தீர்மானம் காரணமாக 750 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தளபதியின் காரியாலயம், பணிப்பாளர்களின் காரியாலயங்கள் மற்றும் ஏனைய காரியாலங்கள் தற்பொழுது வாடகை அடிப்படையில் இயங்கி வருகின்றன. இதனால் இராணுவத்திற்கு மாதாந்தம் 10 கோடி ரூபா காரியாலய வாடகை செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதனால் பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.