285
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், பொது முயற்சியான்மை அமைச்சர் கபீர் ஹாசீம் பதவி விலகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் ஹாசீம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமது அமைச்சின் கீழ் இயங்கி வந்த சில நிறுவனங்கள் வேறு அமைச்சிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மேலும் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் கபீர் ஹாசீம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love