உணவுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு நுகர்வு, உணவு உற்பத்தித் துறை மற்றும் உணவு தயாரிப்பு தொழில்நுட்ப முறைகளின் அடிப்படையில் உணவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
உணவுச் சட்டத்தில் செய்யப்பட உள்ள திருத்தங்களுக்கு பொதுமக்களும் தங்களது பரிந்துரைகளை முன்வைக்க முடியும் எனவும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக தங்களது பரிந்துரைகளை பொதுமக்கள் முன்வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் பரிந்துரைகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்பொழுது 1980ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உணவுச் சட்டமே அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.