149
கிளிநொச்சி இரத்தினபுரம் வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் திருவையாற்றிலிருந்து கிளிநொச்சி ஏ-9 வீதிக்குச் செல்லும் வீதி புனரமைக்கப்படுகிறது. இதன்போது இரத்தினபுரம் வீதியின் சில பகுதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இரத்தினபுரம் வீதியின் ஏனைய பகுதிகள் விரைவில் புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியின் ஊடாக மக்கள் பல்வேறு அசளகரியங்களின் மத்தியில் போக்குவரத்தை மேற்கொண்டனர்.
குறித்த வீதியின் நிலமை தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் கடந்த பல வருடங்களாக சுட்டிக்காட்டி செய்திகளையும் பல் வேறு பதிவுகளையும் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love