மூதூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட 6 இலிருந்து 8 வயதுக்குட்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் நிபந்தனைகளின் அடிப்படையில்; பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர் பிரத்தியேக வகுப்புக்காகச் சென்ற குறித்த மாணவிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் தெரிவித்து பெற்றோர்களினால் செய்த முறைப்பாட்டை அடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இன்று மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிவான் ஐ.எம். ரிஸ்வான் முன்னிலையில் 6 சந்தேக நபர்களும் மீண்டும் முன்னிலை படுத்தப்பட்ட வேளை நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சந்தேக நபர்களை தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு சந்தேக நபருக்கு 4 பேர் பிணையாளிகளாக ஓப்பமிட வேண்டும். மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை போலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் போன்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தின் பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் யூலை 10-ஆம் Nதிகதி வரை விசாரனை ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.