இந்தியாவின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜூலை 17ம்திகதி நடை பெற உள்ள நிலையில் நாளை புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் நிறைவடையவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜூலை 17ம்திகதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதனால் நாளையே ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் ஆரம்பமாகி விடும். அதன்படி நாளை வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகி எதிர்வரும் 28ம்திகதிவரை நடைபெறும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில் பங்கு பற்றுவார்கள். வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்கு பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 20ம்திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.