தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் வழக்கு விசாரணையை ஜூலை 6 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றுள்ளார். அவரை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 18ம் திகதிp லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இதன் போது மல்லையாவுக்கு டிசம்பர் 4ம் திகதி வரை ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
இதேநேரம் தன் மீதான வழக்கு விசாரணைக்கு வரும்போது, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார்
விஜய் மல்லையாவை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணைக்கு வருகிறது:–
un 13, 2017 @ 03:10
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கை லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை விசாரிக்கவுள்ளது.
விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றுள்ளார்.
அவரை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 18ம் திகதிp லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விசாரணைகள் நடைபெறவுள்ளன.