அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா எதிர்வரும் 21ம்திகதி காணொலி காட்சி மூலம் முன்னிலையாகுமாறு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெஜெ தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட தாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக தன்னால் நேரில் முன்னலையாக முடியாது எனவும் எனவே பெங் களூரு சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் முன்னிலையாக அனு மதிக்க வேண்டும் என வி.கே.சசிகலா விடுத்த கோரிக்கையை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.