கைதகள் இல்லாத நாடு ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் உதவி வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து மனிதாபிமான அடிப்படையில் நோக்க வேண்டுமெனவும், இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அபராதத் தொகையை செலுத்த முடியாது தண்டனை அனுபவிக்கும் நபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கொள்கை அடிப்படையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 43 வீதமானவர்கள் சிறு குற்றச் செயல்களின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்