145
சோமாலியாவின் தலைநகர் மொகடி{வில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதியின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து விடுதியினுள் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. ஆத்துடன் தாக்குதல்தாரிகள் விடுதியினுள் சிலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Spread the love