மெக்சிகோவின் எல்லைப் பகுதியில் உள்ள காட்டிமலாவின் மேற்கு பகுதியில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியுளடளது. இந்த நிலநடுக்கத்தால் தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவரும், நிலநடுக்க அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மின்தடையும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டிமலா நகரத்தில் இருந்து 156 கிலோமீட்டர் தூரத்தில் சான் மைக்ரோசை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.