மேற்குவங்கத்திலிருந்து பிரிந்து கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சி ஆரம்பித்த காலவரையறையற்ற போராட்டம் மூன்றாநாளாக இன்று தொட்கின்றது.
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்காலாந்து உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த அக்கட்சியினர் பாடசாலைகள், கல்லூரிகள், நீதிமன்றம், வங்கி ஆகியவை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மத்திய, மாநில அலுவலகங்களும் அடைக்கப்படும் எனவும்; தெரிவித்து கடந்த 12ம் திகதி முதல் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
டார்ஜிலிங் பகுதியில் பாடசாலைகள் , கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு காணப்பட்டதாகவும் ; நேற்று முன்தினம் அரசு அலுவலகங்கள் இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுக்க முயன்றதாகவும் அவர்களை காவல்துறையினர் விரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சிலர் காவல்துறையினர்; மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு ஏற்பட்ட பதட்ட நிலையினைத் தொடர்ந்து; மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த கூடுதலாக 600 துணை ராணுவ வீரர்களை நேற்று முன்தினம் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.