மக்களின் எதிர்ப்பால் முதலமைச்சருக்கு எதிரான தீர்மானத்தை கைவிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், அறிவு ஜீவிகள், புலம்பெயர் அமைப்புக்கள் போன்ற தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் தீர்மானத்தை கைவிட தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டவர்கள்மீது வடக்கு முதலமைச்சர் விட்டுக் கொடுப்பை வழங்க வேண்டும் என கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஊடாக தூது விட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு வடக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வடக்கு முதல்வருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சித்தார்த்தன் ஈடுபட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் இரா. சம்பந்தன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதாக அரசியல் வட்டாரங்களின் ஊடாக தெரிய வருவதாகவும் குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.