நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 26ஆயிரத்து 625 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்கவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ள சுமார் பத்தாயிரம் பேருக்கு இந்த ஆண்டில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் இதுவரையில் 36ஆயிரத்து 235 பேர் இரட்டைக் குடியுரிiமை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களில் 26625 பேருக்கு இரட்டைக் குடியுரிமை சான்றிதழ்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.