பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் 13ம் திகதிக்குள் இந்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக தெரிவித்து ஜாதவ் 2016 ஆண்டு கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான வழக்கு ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் செப்டம்பர் 13ம் திகதிக்குள் இந்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.