இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாணத்தை கொண்டுவர முயற்சிக்கின்றோம் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற குருதி கொடையாளர் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , குருதி கொடை தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆங்கில ஊடகம் ஒன்று தவறான செய்தியை வெளியிட்டது. அதற்கு நாம் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டு இருந்தோம். இரத்த தானத்தில் சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாணத்தை கொண்டு வர குருதி கொடையை ஊக்குவிக்க அனைவரும் முன் வர வேண்டும். என தெரிவித்தார்.