தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து கிழக்கு மாகாண முதலiமைச்சராக முன்னர் கடமையாற்றிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்குத் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இந்தக் கொலை தொடர்பிலான பிரதான சந்தேக நபர்கள் இருவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இந்த இரண்டு பிரதான சந்தேக நபர்களை கைது செய்ய முடியாதபட்சத்தில், பிள்ளையான் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய நேரிடும் என காவல்துறை உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதான சந்தேக நபர்களின் துல்லியமான பெயர் விபரங்கள் கூட தெரியாத நிலையில் அவர்களை கைது செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.