177
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) முற்பகல் சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் அனுசரணையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சர் மனோ கணேசன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட குழுவினர் நிகழ்வில் பங்குபற்றினர்.
Spread the love