159
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏழு முப்பது மணி தொடக்கம் ஒன்பது மணி வரை இந்த நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி முல்லைத்தீவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனா்.
இந் நிகழ்வில் ஜக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனா மக்கோலி முதன்மை விருந்தினராகவும் கலந்துகொண்டதோடு, யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபா்கள் ஆசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Spread the love