ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர் பொன்னுதுரை ஐங்கரநேசன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவிற்கமைய தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் 15ஆம் திகதி தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை இன்று அவர் கையளித்துள்ளார்.
எனினும், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மற்றய அமைச்சரான தம்பிராஜா குருகுலராசா, தமது பதவி விலகல் கடிதத்தை இதுவரை கையளிக்கவில்லை என வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு ஏதுவாக, விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்ட அமைச்சர்கள், இதுவரை தமது விடுமுறை கடிதங்களை கையளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலை தணிக்கும் முயற்சிகள் தொடரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.