குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூல் நிறுவனம் பணியாளர்கள் பற்றிய விபரங்கள் கசியவிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. content moderators களின் அடையாள விபரங்களே தவறுதலாக இவ்வாறு கசியவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தகவல்கள் கசிய விடப்பட்டதனால் முகநூல் நிறுவனத்தில் கடமையாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முகநூல் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் பதிவுகளை இடுவோரை கண்டறிந்து அதனை நீக்கும் பணிகளில் ஈடுபடுவோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபாசமான விடயங்கள், வன்முறைகள், இனக்குரோத விடயங்கள் தொடர்பிலான தகவல்களை முகநூலில் பதிவிடுவோரின் கணக்குகளிலிருந்து அவற்றை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு தகவல்களை வழங்கும் பணியாளர்களின் அடையாளங்களே கசியப்பட்டுள்ளன. இந்தப் பணியாளர்கள் தீவிரவாதிகளின் இலக்காக மாறக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.