குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
22 பேர் புதிதாக தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் எதிர்வரும் மாதங்களில் பதவிக் காலம் முடிவடைய உள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் கொன்சோல் ஜெனரல்களுக்கு பதிலீடாக புதிதாக 22 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான் போன்ற நாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கைத் தூதுவர்களின் பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ள நிலையில், புதிய தூதுவர்கள் நியமிக்கப்படும் வரையில் அவர்கள் பதவியில் நீடித்து வருகின்றனர்.
இலங்கையின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் கொன்சோல் ஜெனரல்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிவிவகார சேவையில் உள்ளடக்கப்படாதவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் காணப்பட்ட அதிகாரிகளுக்கான பற்றாக்குறையினால் வெளிவிவகார அமைச்சிற்கு புறம்பாக வேறும் நபர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.