Home இலங்கை இருதய நோயுடைய குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான Little Heart Project திட்டம்:-

இருதய நோயுடைய குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான Little Heart Project திட்டம்:-

by admin

தற்போது சிறுவர்களின் மிகப்பெரிய வைத்தியசாலையாகிய Lady Ridgeway Hospital- LRH (சீமாட்டி வைத்தியசாலை) கொழும்பில் இயங்கி வருகிறது. இது இலங்கையின் சகல மாவட்டங்களுக்குமான மேலதிக  அதி விசேட இலவச சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கொழும்பில் உள்ள சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் பத்து மாடிகளைக் கொண்ட இருதய சிகிச்சைப்பிரிவு மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட கட்டத் தொகுதி  நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான நிதி சேகரிக்கும் முகமாக பிரித்தானியா வாழ் இதயசிகிச்சை நிபுணர்கள் மற்றம் நண்பர்கள் இணைந்து தெற்கின் தெய்வேந்திரா முனையில் இருந்து வடக்கின் பருத்தித்துறை வரை சைக்கிள் பவனியொன்றை “Cardiac Cycle Lanka”என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்துள்ளார்கள். இச் சைக்கிள் பவனி பருத்தித்துறையை எதிர்வரும் 19.06.2017 திகதியன்று வந்தடையும்

தாராள மனம் படைத்தோர்கள் தங்கள் பெறுமதிமிக்க நிதிப்பங்களிப்பினை இச்சைக்கிள் பவனியின் போது கையளித்து எமது சின்னஞ்சிறார்களின் எதிர்காலம் ஒளிமயமாக்கும் இத்திட்டம் வெற்றி பெற உதவி புரியமுடியும்.

Little Heart Project

இருதய நோயுடைய குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான திட்டம்.

  1. இத்திட்டத்தின் குறிக்கோள் என்ன?

தற்போது சிறுவர்களின் மிகப்பெரிய வைத்தியசாலையாகிய Lady Ridgeway Hospital- LRH (சீமாட்டி வைத்தியசாலை) கொழும்பில் இயங்கி வருகிறது. இது இலங்கையின் சகல மாவட்டங்களுக்குமான மேலதிக  அதி விசேட இலவச சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கொழும்பில் உள்ள சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் பத்து மாடிகளைக் கொண்ட இருதய சிகிச்சைப்பிரிவு மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட கட்டத் தொகுதி  நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  1. ஏன் இந்த திட்டம் மிகவும் அவசியமானது?

2.1.          இருதய சிகிச்சைப்பிரிவு

இலங்கையில் அண்ணளவாக ஒவ்வொரு வருடமும் மூவாயிரம் (3,000) குழந்தைகள் இருதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர்.

தற்போதுள்ள வசதிகளுக்கமைய ஆகக்கூடியது ஆயிரம் (1,000) இருதய சத்திர சிகிச்சைகளையும் (Open Heart Surgery) எழுநூறு (700) கதீட்டர் (Cardiac Catheter Intervention) மூலமான சிகிச்சைகளையே செய்ய முடியும். ஆனால் தற்போதுள்ள தேவைக்கமைய ஆகக்குறைந்தது 2,000 Open Heart Surgery  களும் 1,000 Catheter  மூலமான சிகிச்சைகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பெருமளவு சிறார்கள் இருதய சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். பலர் தேவையான நேரத்தில் சிகிச்சை செய்ய முடியாது உயிரிழக்கின்றனர்.

2.2.          அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (Critical Care)

தற்சமயம் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு Medical Intensive Care Unit – MICU) 11 கட்டில்களையும், சிசுக்களுக்கான அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (Neonatal Intensive Care Unit – NICU) 7 கட்டில்களை மாத்திரமே கொண்டுள்ளது.  இது 1-2 % தேவைகளையே பூர்த்தி செய்கின்றது. இதனால் இத்தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய 60 %  கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இதனால் இக்குழந்தைகள் சாதாரண வாட்டுக்களில் (General Wards) பராமரிக்கப்படுகின்றனர்.

இதனால் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 1,000-1,500 இருதய குறைபாடுகளுடன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகன்றது.

  1. இக்கட்டிடத் தொகுதியில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது?

3.1.          களஞ்சிய அறை, தொற்று நீக்கும் பகுதி – Ground floor

3.2.          நான்கு அதி நவீன இருதயசத்திர சிகிச்சைக் கூடங்கள்

3.3.          அதி நவீன கதீட்டர் ஆய்வு கூடம் – 1ம் மாடி

3.4.          15 கட்டில்களைக் கொண்ட இருதய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU)) – 2ம் மாடி

3.5.          நவீன இருதய பரசோதனை ஆய்வு கூடம் – (3ம் மாடி)

3.6.          வெளிநாட்டு வைத்தியர்களினால் நடத்தப்படும் செயன்முறை ஆய்வு கூடம் (Workshop)) – 3ம் மாடி

3.7.          36 கட்டில்களைக் கொண்ட MICU (4ம், 5ம், 6ம் மாடி)

3.8.          40 கட்டில்களைக் கொண்ட NICU (7ம், 8ம் மாடி)

3.9.          விரிவுரை மண்டபம், உள்ளக பணியாளர்களுக்கான செயன்முறை ஆய்வுகூடம்.

  1. இத்திட்டத்தின் பெறுமதி எவ்வளவு?

இரண்டு பில்லியன் ரூபாய்கள்

  1. ஏன் உங்களின் பங்களிப்பு அவசியம்?
  • உங்களின் சொந்தக் குழந்தை தீவிர நோயினால் பாதிக்கப்பட்டால் உங்கள் குழந்தைக்கு ICU பராமரிப்பு கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறு 30 % மட்டுமே.
  • உங்கள் குழந்தை இருதய நோயினால் பீடிக்கப்பட்டால், உரிய நேரத்தில் சத்திர சிகிச்சை வழங்கக்கூடிய சாத்தியக்கூறு ஆகக்கூடியது 50 % மட்டுமே
  • 50%-70% வீதமான குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை வழங்கப்படாமல் இருக்கலாம். ஆகவே இத்திட்டத்திற்கு தாராள மனத்துடன் பங்களிப்புச் செய்வது அவசியமாகும். இது உங்களின் கடமை.
  1. இத்திட்டம் எவ்வாறு நெறியாளப்படுகிறது?

இத்திட்டம் இலங்கை குழந்தை மருத்துவ நிபுணர்களின் சம்மேளத்தினால் (SLCP) கையாளப்படுகின்றது. இதனை விட பல்வேறு மனித நேய அமைப்புக்களும் இத்திட்டத்திற்கான நிதி சேகரிப்பில் உதவுகின்றன. சேகரிக்கப்படும் நிதியானது இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ அமைப்புக்களினால் கண்காணிக்கப்பட்டு கட்டட நிர்மாணத்துக்கு வழங்கப்படும்.

  1. இலங்கை அரசினதும் சுகாதார அமைச்சினதும் அனுமதி இத்திட்டத்திற்கு பெறப்பட்டுள்ளதா?

ஆம். திட்டமிடல் திணைக்களமும் இத்திட்டத்திற்குரிய அனுமதியை வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சு இத்திட்டத்தை மிக முக்கியமான திட்டமாக அங்கீகரித்துள்ளது. இதற்குரிய காணி ஒதுக்கப்பட்டு கட்டட வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டள்ளது. மார்ச் மாதம் 28ம் திகதி இத்திட்டத்திற்குரிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதைவிட 300 மில்லியன் ரூபாவினை ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்திலிருந்து இலங்கை அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. கட்டட நிர்மாணம் CECB யினால் மேற்பார்வை செய்யப்படுகின்றது.

  1. ஏன் இத்திட்டத்திற்கு நிதியை இலங்கை அரசாங்கம் வழங்க முடியாது?

இலங்கை அரசு ஏற்கனவே 500 மில்லியன் ரூபாய்களை ஒவ்வொரு வருடமும் LRH  இருதயவியல் பிரிவுக்கு வழங்கி வருகிறது. இதை விட ஒவ்வொரு இலங்கைக் குடிமகனுக்கும் இலவச மருத்துவ வசதிகளை அரசாங்கம் வழங்குகிறது. மேற்கொண்ட காரணங்களினால் இக்கட்டிடத்திற்கு தேவையான 2 பில்லியன் நிதியை முழுமையாக இலங்கை அரசினால் ஒதுக்க முடியாது.

இலங்கை அரசினால் இத்திட்டத்திற்கு முழுமையாக நிதிஉதவி செய்து முடிப்பதற்கு அண்ணளவாக 10 வருடங்களேனும் தேவைப்படலாம். இக்காலப்பகுதியில் எத்தனை சிறுவர்களை நாங்கள் இழப்போம் என்பதனை நினைத்துப் பாருங்கள். எனவே சிந்தித்து செயலாற்றி சின்னஞ்சிறு உயிர்களைக் காப்பாற்ற இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்ய முன்வாருங்கள்.

  1. நான்கு சத்திரசிகிச்சைக் கூடங்களையும் நடத்துவதற்கு தேவையான ஆளணியை வைத்தியசாலை கொண்டுள்ளதா?

தற்சமயம் ஆளணிப்பற்றாக்குறை நிலவுவது உண்மை. 2003 ஆம் ஆண்டில் முதலாவது இருதய சத்திரசிகிச்சை நிபுணர் LRH இற்கு நியமிக்கப்பட்டார். ஆனால் சத்திரசிகிச்சைக் கூட வசதியின்மையினால் 4 வருடங்களின் பின்னே சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆகவே போதியளவு சத்திரசிகிச்சைக் கூடங்கள் இருப்பின் தேவையான வைத்திய நிபுணர்களை சுகாதார அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

  1. யார் இக்கட்டடத்தை பராமரிக்கப் போகின்றனர்?

இக்கட்டடமானது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். ஆகவே இக்கட்டிடத் தொகுதியில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வருடாந்த பராமரிப்பை சுகாதார அமைச்சே மேற்கொள்ளும்.

 

  1. இத்திட்டம் (Little Heart Project) தோல்வி அடைவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா?

இல்லை. அதற்கான காரணங்கள்

ய)           இத்திட்டம் தேவையற்றது என மேற்கூறிய காரணங்களினால் எவராலும் வாதிட முடியாது.

டி)           இத்திட்டமானது அரசாங்கத்தின் நிகழ்ச்சிக்கமையவே நடத்தப்படுகிறது. எமது பங்களிப்பு இத்திட்டத்திற்கு துரிதப்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது.

உ)          இன்று வரை இத்திட்டமானது மிகவும் முன்னேற்றகரமான பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. தற்போது வரைக்கும் 135 மில்லியன்  ரூபாய்கள் இந்தத்திட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கட்டடிட வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ன)          இவ்விலக்கை நாம் எட்டாவிட்டால் இது இத்திட்டத்தின் தோல்வி அல்ல. ஒரு ஆக்கபூர்வமான திட்டத்திற்கு இலங்கை மக்களின் பங்களிப்பின்மையால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் தோல்வியாகும். இலங்கையானது தாராள மனமுடைய நன்கொடை நாடுகளின் பட்டியலில் (World Giving Index) 5 ஆம் இடத்தை வகிக்கின்ற நாடு எனவே இத்திட்டம் தோல்வி அடைய வாய்ப்புக்கள் இல்லை.

  1. ஏன் குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சைப்பிரிவு நாட்டின்; ஏனைய பாகங்களில் ஆரம்பிக்க முடியாது?

மிக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட குறைந்தளவு சத்திரசிகிச்சைப் பிரிவுகளே பாவிக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானியாவில் இருந்த 11 நிலையங்களானது 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா இலங்கையை விடவும் 117 மடங்கு பரப்பளவைக் கொண்டாலும் 6 இருதய சத்திரசிகிச்சை சிகிச்சை சிலையங்களை மாத்திரமே அந்நாடு கொண்டுள்ளது. எனவே ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளை ஒரு சத்திர சிகிச்சைப் பிரிவில் வழங்குவதே நீண்ட நோக்கில் செயல்திறன் வாய்ந்ததாக அமையும்.

  1. இத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் நிதி எவ்வாறு கையாளப்படுகின்றது.

இலங்கை வங்கி

வங்கிகள்            கொமர்சியல் வங்கி

சம்பத் வங்கி

ஹற்றன் நசனல் வங்கி

தேசிய சுகாதார நிதியம்

கட்டுமானத்திற்கான செலவுகள்

  1. உங்கள் பங்களிப்பு என்ன?

இது இலங்கை மக்களினால் குழந்தைகளைக் காப்பாற்றும் திட்டமாகும். எனவே இயலுமான அளவு உங்களின் பங்களிப்பைச் செய்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்யுங்கள்.

அனைத்து மதத்தலைவர்களும், பொது நிறுவனங்களும் இத்திட்டத்தை ஆதரித்து எமது சிறுவர்களின் உயிரைக் காக்க உதவுங்கள்.

  1. நன்கொடை வழங்கும் வழிமுறைகள்

இத்திட்டத்திற்கான உங்கள் நன்கொடைகளை வழங்குவதற்கு பல வழிகள் உள்ளன. இத்திட்டத்திற்கு 2 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு உயிரைக் காப்பாற்றும். உங்கள் உதவி சிறிதாக இருந்தாலும் அது ஒரு உன்னத இலட்சியத்துக்கு வழிகோலும்.

  • வங்கி வைப்பினூடான நன்கொடை

 

  • இலங்கை வங்கி பொரளை சுப்பர்கிரேட் கிளையில் “Little Hearts” எனும் கணக்கின் பெயரில் 79738633 எனும் கணக்கிலக்கத்திற்கு அனைத்து இலங்கை வங்கி கிளைகளிலும் பணத்தை வைப்பிடலாம்.

SWIFT Code: BCEYLKLX,   Bank Code: 7010,                Branch Code: 38

 

  • சம்பத் வங்கியில் “Sri Lanka College of Paediatricians” எனும் கணக்கின் பெயரில் 002930026126 எனும் கணக்கிலக்கத்திற்கு அனைத்து சம்பத் வங்கி கிளைகளிலும் பணத்தை வைப்பிடலாம்.
  • ஒன்லைன் ஊடான நன்கொடை
    • http://littlehearts.lk/donation என்ற இணையத்தளத்தில் கடனட்டை ஊடாக நன்கொடையைச் வழங்கலாம்.
    • சம்பத் வங்கியின் விஸ்வா எனும் தளத்தினூடாக நன்கொடையை வழங்கலாம்
  • mCASH ஊடான நன்கொடை
    • அனைத்து மொபிட்டல் பாவனையாளர்களும் Dial#111# டைப் செய்து Little Hearts என்று தெரிவு செய்து உங்கள் PIN இலக்கத்தையும் எங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்து உங்கள் நன்கொடைத் தொகையை வழங்கலாம்.
  • ஒரு தடவை SMS ஊடான நன்கொடை
    • அனைத்து டயலொ மற்றும் ஹச் முற்கொடுப்பனவுஃபிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது நன்கொடையை வழங்குவதற்கு LH<இடைவெளி><நன்கொடைதொகை> என டைப் செய்து 77100 இற்கு அனுப்பவும். ரூபா 5 இலிருந்து ரூபா 2,500 வரை செலுத்தலாம்.
  • மாதாந்தம் SMS ஊடான நன்கொடை
    • அனைத்து டயலொக் மற்றும் ஹச் முற்கொடுப்பனவுஃபிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது நன்கொடையை வழங்குவதற்கு

REG<இடைவெளி><நன்கொடைதொகை> டைப் செய்து 77100 க்கு அனுப்பவும். உங்கள் மாதாந்த கொடுப்பனவு பட்டியலில் ரூபா 90 அறவிடப்படும்.

  • டயலொக் Star Points ஊடான நன்கொடை
    • Dialog Selfcare App இனை பாவித்து Loyalty > Star Points > Donate > Institution “Little Hearts”” இற்கு சென்று நீங்கள் வழங்கும் புள்ளிகளை பதிவிடவும்.
    • சகல டயலொக் வாடிக்கையாளர்களும் #141*6*4# என டைப் செய்து உங்கள் நன்கொடைத் தொகையை குறிப்பிடவும்.
  • கீல்ஸ் சுப்பர் ஊடான நன்கொடை
    • நன்கொடைத் தொகையை எந்தவொரு கீல்ஸ் சுப்பர் மையங்களிலும் வழங்கலாம்.
  • இணையமூடான நன்கொடை
    • giftsmart.lk எனும் இணையத்தளத்தினூடாக உங்கள் நன்கொடையைச் செலுத்தலாம்.

இத்திட்டத்திற்கான நிதி சேகரிக்கும் முகமாக பிரித்தானியா வாழ் இதயசிகிச்சை நிபுணர்கள் மற்றம் நண்பர்கள் இணைந்து தெற்கின் தெய்வேந்திரா முனையில் இருந்து வடக்கின் பருத்தித்துறை வரை சைக்கிள் பவனியொன்றை “Cardiac Cycle Lanka”” என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்துள்ளார்கள். இச் சைக்கிள் பவனி பருத்தித்துறையை எதிர்வரும் 19.06.2017 திகதியன்று வந்தடையும்.

தாராள மனம் படைத்தோர்கள் தங்கள் பெறுமதிமிக்க நிதிப்பங்களிப்பினை இச்சைக்கிள் பவனியின் போது கையளித்து எமது சின்னஞ்சிறார்களின் எதிர்காலம் ஒளிமயமாக்கும் இத்திட்டம் வெற்றி பெற உதவி புரியமுடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More