குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய பக்டீரியா வகை ஒன்றை பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த வகை பக்டீரியாக்களை பயன்படுத்தி டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட உள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த வகை பக்டீரியாக்களினால் டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளின் விசத்தை குறைக்க முடியும் என ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.அவுஸ்திரேலியாவின் மொனாஸ் பல்கலைக்கழகத்தினால் இந்த வகை பக்டீரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த வகை பக்டீரியாக்களை பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், ஆய்வுகள் வெற்றியளித்தால் பக்டீரியாக்களை பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பக்டீரியா பயன்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் மாதம் இலங்கை வரவுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.