வடக்கு மாகாண சபையில் பாரிய சர்ச்சைகள் மேலெழுந்துள்ள நிலையில், யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் நல்லை ஆதீனம் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு அம்சமாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வனுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தற்போது முக்கிய சந்திப்பொன்று நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாடு குறித்த மகஜரொன்றை கையளித்துள்ள குறித்த சமய தலைவர்கள், முதலமைச்சருடன் விரிவாக கலந்துரையாடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றுத.
இதேவேளை நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர், நல்லை ஆதீனத்தையும் யாழ். ஆயரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்குத.
வடக்கு மாகாண சபை பிரச்சினையானது, எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமாதான முயற்சியில் தீர்க்கப்பட வேண்டுமென இவ்விருவரும் தெரிவித்திருந்தனர்.
இதே வேளை நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தமையும், அதன் பின் ஒளிக்கீற்று தென்படுவதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.