வடகொரியாவால், சுமார் 15 மாதங்களுக்கும் மேலாக சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்க மாணவன் ஒட்டோ வோர்ம்பியர் இன்று செவ்வாய்க் கிழமை உயிரிழந்துள்ளார்.
22 வயது நிரம்பிய ஒட்டோ, மனிதாபிமான அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும், அவரது தலையில் கடுமையாக தாக்கப்பட்ட காரணத்தால் அவர் கோமா நிலையிலேயே மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
தகரப் பேணிகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டதன் மூலம், அதில் பரவியிருந்த பக்டீரியாக்கள் ஒட்டோவின் உடல்நிலையை மோசமாக்கி விட்டன என வடகொரியா காரணம் தெரிவித்திருந்தது.
எனினும், ஒட்டோ கண்மூடித்தனமான விதத்தில் தாக்கப்பட்டுள்ளார் எனவும் அதனாலேயே அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் ஒட்டோவுடைய குடும்பம் தெரிவித்துள்ளது.