குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையின் முன்னாள் படையதிகாரி ரியர் அட்மிரால் சரத் வீரசேகர, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தலைவர் Joaquin Alexander Maza Martelli இடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சயிட் அல் ஹூசெய்ன் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சயிட் அல் ஹூசெய்ன் மற்றும் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்டு ஆகிய இருவருமே போலியான தகவல்களின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் இதில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் இவ்வாறு பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா மற்றும் அமெரிக்க யுத்த வீரர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை இலங்கை படைவீரர்களுக்கும் அளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.