155
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தாக்குதல் மேற்கொண்டநபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love