160
t
வடமாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு பல மாதங்கள் ஆகியும் இன்னமும் அரசாங்கம் அதற்கான அங்கீகாரத்தை வழங்காது தொடர்பில் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் கோரினார்.
வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் வடமாகாண முதலமைச்சர் நிதியம் தொடர்பிலான நியதி சட்டத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து இன்னமும் அதற்கான ஒப்புதல் கிடைக்க பெறவில்லை.
அதனை அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் பந்தினை மாறி மாறி அடிப்பது போன்று செயற்படுகின்றனர். எனவே இது தொடர்பில் முதலமைச்சர் உச்ச நீதிமன்றில் வழக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.
அதனூடாக அரசாங்கம், முதலமைச்சர் நிதியத்திற்கு இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை எனவும் இதனை கூட அவர்கள் தர தயாராக இல்லை எனும் விடயமும் வெளியில் மக்களுக்கு தெயர்யா வரும் என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் , தற்போது நீதிமன்றில் வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன். இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி இருந்தேன்.
நியதி சட்ட தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். எனவே மிக விரைவில் முதலமைச்சர் நிதியத்திற்கான நியதி சட்டத்திற்கான ஒப்புதல் கிடைக்க பெறும் என நம்புவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
Spread the love