குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிங்கள இனத்திற்கும் பௌத்த மதத்திற்கும் அரசாங்கம் ஒரு போதும் துரோகம் இழைக்காது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரையில் சிங்கள இனத்திற்கும், பௌத்த மதத்திற்கும் பாதக நிலைமைகள் ஏற்படாது என குறிப்பிட்டுள்ள அவர் ஆட்சி அதிகாரத்தை இழந்து மீளவும் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் சிலரே இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஒவ்வொரு விஹாரைக்கும் இரண்டு ஏக்கர் காணி வழங்க வேண்டுமென தாம் முன்மொழிந்த யோசனையை அப்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அப்போது ஆட்சி நடத்தியவர்கள் தற்போது பௌத்த மதம் பற்றி உரிமை கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு தங்கக் கூரை அமைத்த தலைவரின் புதல்வர் என்ற ரீதியில் பௌத்த மதத்திற்கு ஏதேனும் நெருக்கடிகள் வர தாம் எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.