பூமியை நோக்கி விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது முக்கிய நகரங்களை தாக்க உள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச விண்கல் தினம் வரும் ஜூன் 30ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் லண்டன் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து லண்டனிலுள்ள பெல்ஃபாஸ்ட் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் கூறும் போது விண்கல் பூமியை தாக்குமா என்ற கேள்வியைவிட இது எப்போது நடக்கப் போகிறது என்ற கேள்வி மட்டுமே தற்போது உள்ளதென தெரிவித்துள்ளனர்.
எப்போது அந்த விண்கல் பூமியை தாக்கும் என்று கூற இயலாது என்ற போதிலும் அது நிச்சயமாக பூமியை தாக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.