குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் காலங்களில் மீத்தொட்டமுல்ல குப்பை மேடு இருந்த இடத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுவதில்லை என்று கொழும்பு மாநகர சபை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
அந்தப் பிரதேசத்தில் குப்பை கொட்டுவதை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி பிரதேசவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் கொழும்பு மா நகர சபை சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.
திண்மக் கழிவுகளை
கொட்டுவதற்காக மாற்றுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்
இதேவேளை மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மீதொட்டமுல்ல குப்பை மேடு காரணமாக 40 இற்கும் அதிக உயிர்கள் உயிரிழந்தமையை மன்றில் சுட்டிக்காட்டியதுடன் குறித்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் செப்ரம்பர் 27ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.