குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட் பொதுமக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் இருக்கும் மலைப்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைகள் இன்று காலை திடீரென சரிந்து விழ ஆரம்பித்துள்ளதனால் மலைச் சரிவில் உள்ள ஜின்மோ என்ற கிராமத்தில் இருக்கும் 40 வீடுகள் இந்த மண்சரிவில் புதைந்துள்ளன.
இந்தநிலையில் இந்த கிராமத்தில் சுமார் 100 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.