குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தானின் பஹவல்பூரில் எண்ணெய் ஏற்றிக் கொண்டுச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் விபத்து ஏற்பட்ட பாரவூர்தியிலிருந்து கசிந்த எரிபொருளை எடுக்கச் சென்ற பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திறகு சென்றுள்ள தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தி அதிக வேகத்தில் சென்றதால் கவிழ்ந்து, பின்னர் தீப்பிடித்து எரிந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.