186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாம் உளவாளியாக செயற்பட்டதாக சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியில் அங்கம் வகித்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உளவாளியாக செயற்பட்டதாக சுமத்திய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஜாதிக ஹெல உறுமயவின் மற்றுமொருவர் உளவாளியாக செயற்பட்டார் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு நெருக்கமான ஒருவர் உளவுப் பணியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love