கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனத்த மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 2 வாரங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக காணப்படுகின்றது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் வீடுகள் இடிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் பெண் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றும், நாளையும் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.