179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை அண்மையில் சந்தித்தமை குறித்து அருந்திக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அண்மையில் அருந்திக்க ஜப்பானுக்கு பயணம் செய்திருந்த போது உதயங்கவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை முகநூலில் பிரசூரித்திருந்தார்.
மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான வழக்கில் அருந்திக்கவிற்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love