சமூகநல திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய மத்திய அரசு பல்வேறு சமூகநல திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த மனுமீதான விசாரணை இன்று இடம்பெற்றபோது சமூகநல திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
இந்த வழக்கில் இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஆதார் பெறுவதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசத்தினை செப்டம்பர் 30ம்திகதிவரை வரை நீடிக்கப்படுவதாக தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இடைக்கால தடைஎதுவும் விதிக்காமல் வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம்திகதிக்கு ஒத்தவைத்துள்ளனர்.