குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-
வெனிசுலாவின் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி நிகலோஸ் மடுரோ இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் ஓர் பயங்கரவாதத் தாக்குதல் என ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். காவல்துறை ஹெலிகொப்டரே இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நிகலோஸ் மாடுரோவிற்கு எதிராக கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் இதுவரையில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா உதவி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.