கொழும்பு நகரில் குறைபாடுகளுடைய வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடனான வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ‘லக்கிரு செவன’ மாடி வீட்டுத் திட்டத்தின் முதலாவது கட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (28) மக்களுக்கு வழங்கப்பட்டது.
பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் நெறிப்படுத்தலில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகர புத்தெழுச்சி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 192 வீட்டு அலகுகளை கொண்ட இந்த வீடமைப்பு தொகுதிக்காக ரூபா 6,720 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘லக்விரு செவன’ திட்டம் 768 வீடுகளைக் கொண்டதாகும். அதற்கமைய மேலும் 192 வீட்டு அலகுகளைக் கொண்ட மூன்று கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.