குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவசர நிலைமைகளில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை மலினப்படுத்தாத வகையிலும், பாராளுமன்ற ஆட்சி முறைமையை வலுப்படுத்தும் வகையிலும் அரசியல் சாசனத்தை அமைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தை அமைக்கும் பணிகள் மிகவும் நீண்டதாகும் எனவும், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டே பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வு நாட்டின் தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் அதிகாரப் பகிர்வின் ஊடாக, நாட்டை பிளவுபடுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இறையாண்மை மக்களின் கைகளில் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ள பிரதமர் புதிய அரசியல் சாசனத்தில் மாகாண முதலமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்கள் கூடுதலான அதிகாரங்களை கோரி நிற்பதாகவும், அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.