குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லஞ்சம் பெற்றுக் கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, காணாமல் போனவர் ஒருவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து மூன்றரை லட்சம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிலாபம் காவல் நிலையத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள எட்டு குற்றச்சாட்டுக்களில் நான்கு குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.