177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் கொத்தணி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மெயாடின் என்ற கிராமத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்த பட்சம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்னதாக அமெரிக்க தலைமயிலான கூட்டுப் படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சிறைச்சாலை மீது நடத்தியிருந்த தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love